கிள்ளான், ஏப்ரல்-10 சிலாங்கூர் கிள்ளானில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட 79 வயது முதியவர் உயிரிழந்தார்.
இரவு 10 மணி வாக்கில் Batu 9, Jalan Kereta Api Lama-வில் உள்ள Class C குடியிருப்பில் அத்தீ ஏற்பட்டது.
வீட்டில் முழுவதுமாகப் பரவியத் தீயை இரவு 11.30 மணிக்குள்ளாகக் கட்டுப்படுத்தியத் தீயணைப்பு மீட்புத் துறை, தீயில் கருகிய அம்முதியவரின் உடலை ஒரு மரக்கட்டைக்கு அடியில் இருந்து மீட்டது.
அவரின் சகோதரர் எனக் கூறப்படும் மற்றொரு முதியவர் முன்னதாக பொது மக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டார்.
தீயில் வீட்டின் 90% பகுதி சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.