Latestமலேசியா

கிள்ளானில் வெள்ளப் பேரிடரை தடுக்க வடிகால் முறை மேம்படுத்தப்படும் – சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான், மார்ச் 4 – தமது தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் நீர்ப்பாசன அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் வடிகால் முறையை சீரமைப்பதற்கான திட்டம் அங்கீகரிப்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Amirudin Shari கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தனித்திருக்கும் நடவடிக்கையில் இதுருந்துவருகிறார். இதனால் இந்த திட்டத்தை அங்கீகரிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக Charles Santiago கூறினார்.

Taman Melawis சில் 15 மில்லியன் ரிங்கிட் செலவிலான வெள்ள தடுப்பு திட்டத்திற்கு சிலாங்கூர் மந்திரிபுசார் கையெழுத்திடுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த சில நாட்களாக கடுமையாக மழை பெய்ததால் கிள்ளானில் Taman Melawis, Panji Perdana , Pandamaran மற்றும் Port Klang கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!