Latestமலேசியா

கிள்ளான் ஆற்றருகே கண்டெக்கப்பட்ட சடலம் காணாமல் போன மலாய் பாடகர் நிட்சாவுடையது; போலீஸ் உறுதிப்படுத்தியது

ஷா ஆலாம், ஆகஸ்ட்-15 – கிள்ளான் ஆற்று பாலத்தருகே கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம், வளர்ந்து வரும் உள்ளூர் மலாய் பாடகர் நிட்சா அஃபாம் மொக்தாருடையது (Nidza Afham Mokhtar) என சிலாங்கூர் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அச்சடலம் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிட்சா முன்னதாகக் காணாமல் போனதாக செய்தி வெளியான போது, அவர் கொள்ளையிடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது.

அவரின் ரொக்கப் பணமும் வங்கி அட்டைகளும் காணாமல் போயின; ஆனால் பணப்பையில் வைத்திருந்த அடையாள அட்டை, மாணவர் அட்டை, மற்றும் புகைப்படம் அப்படியே இருந்தன.

அதுவும், கிள்ளான் ஆற்று பாலத்தின் மேலே அப்பணப்பையும் கைப்பேசியும் தனியாகக் கிடந்தது, அவர் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.

கிள்ளான் சுல்தான் சுலைமான் அரங்கில் மெதுவோட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற நிட்சா அதன் பிறகு வீடு திரும்பவேயில்லையென, அவரின் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு போலீசில் புகார் செய்தனர்.

அதே நேரத்தில், நிட்சாவாக இருக்கலாமெனக் கூறி, 56 என்ற எண் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்திருந்த ஆடவர் கிள்ளான் மஸ்ஜீத் இந்தியாவில் நடந்து செல்லும் CCTV கேமரா பதிவும் சமூக ஊடகத்தில் வைரலானது.

இந்த நிலையில் தான், அதே 56-ஆம் எண் பொறிக்கப்பட்ட கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த இளைஞரின் சடலத்தை புதன்கிழமை இரவு 7 மணி வாக்கில் கிள்ளான் ஆற்று பாலத்தருகே தீயணைப்பு மீட்புத் துறை கண்டெடுத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!