கோலாசிலாங்கூர், பிப் 23 – கிள்ளான் ஆற்றில் முதலை இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து அது குறித்து சிலாங்கூர் பூங்கா மற்றும் வனவிலங்குத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக அதன் இயக்குனர் Dennis Ten Choon Yung கூறினார்.
கிள்ளான் ஆற்றில் வழக்கமாகவே இருக்கும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. அந்த ஆற்றில் முதலை இருப்பது குறித்து கிராமவாசிகளும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மீன்பிடிக்கச் செல்வோர் கிள்ளான் ஆற்றில் முதலை இருப்பதை ஏற்கனவே கண்டுள்ளனர் என அவர் கூறினார்.
ஆற்றின் சதுப்பு நிலப் பகுதியில் பெரிய அளவிலான முதலையைக் கொண்ட 23 வினாடிகளைக் கொண்ட காணொளி புதன்கிழமையன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. மீன் பிடிக்கும் நடடிக்கையில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் அந்த முதலையை புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிகிறது.