கிள்ளான் தெப்பி சுங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் பைரவர் கும்பாபிஷேகம் நேற்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. சிவஸ்ரீ S.பிரசன்னா குருக்கள் தலைமையில் திருமந்திரங்கள் ஓதப்பட்டு நன்னீராட்டு பெருவிழா SOP நடைமுறைக்கு ஏற்ப நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கிட்டத்தட்ட 2,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தீபாராதனை அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜைக்குப் பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் கிள்ளான் மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டது குறித்து ஆலய தலைவர் எம். சுப்ரமணியம் தமது மகிழ்ச்சியை தெரிவித்தார்.