Latestமலேசியா

கிள்ளான் தெப்பி சுங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கால பைரவர் மூர்த்தி கும்பாபிஷேகம்; மார்ச் 6இல் நடைபெறும்

கிள்ளான், மார்ச் 2 – கிள்ளான் தெப்பி சுங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் பைரவர் சன்னதி, சனிஸ்வரர் சன்னதி மற்றும் நாகர் சன்னதி ஆகியவை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டு இப்போது பூர்த்தியடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து பைரவர் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் மார்ச் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழைமை கலை 9.00 மணிக்கு மேல் தொடங்கி 9.45மணிக்குள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெறும். சிவஸ்ரீ S.பிரசன்னா குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி ஆலயத் தலைவர் எம்.சுப்ரமணியம் மற்றும் நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!