Latestமலேசியா

அல்லா காலுறையை விநியோகித்த நிறுவனத்தின் உரிமத்தை, MPBP இரத்து செய்தது

பத்து பஹாட், மார்ச் 21 – அல்லா எனும் வாசகம் இடம்பெற்றிருந்த காலுறைகளை விநியோகித்ததால், சர்ச்சையில் சிக்கிய Xin Juan Chang நிறுவனத்தின் நடவடிக்கை உரிமத்தை, MPBP – பத்து பஹாட் நகராண்மைக் கழகம் இரத்து செய்துள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்நுறை உரிம சட்டம் உட்பட இதர ஒரு துணை சட்டங்களுக்கு கீழ், அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், காலணி மற்றும் விநியோகஸ்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட வணிக உரிம நடவடிக்கைகளின் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பத்து பஹாட் நகராண்மைக் கழகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

உரிம இரத்து அறிப்பை, பத்து பஹாட் நகராண்மைக் கழகத் தலைவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயல்குனரிடம் நேற்று நேரடியாக ஒப்படைத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!