
நீண்ட வார இறுதி மற்றும் விடுமுறையை முடித்துக் கொண்டு பலர் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதனால், காராக், கோம்பாக் டோல் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று மாலை மணி நான்கு தொடங்கு, கெந்திங் செம்பா சுரங்க பாதை தொடங்கி வாகன நெரிசல் எற்பட்டதாக, கோம்பாக் OCPD அசிஸ்டன் கமிஸ்னர் ஜைனால் முஹமட் முஹமட் தெரிவித்தார்.
எனினும், கோம்பாக் சாலை கட்டண சாவடியை கடந்து MRR2 சாலையில் நுழைந்தவுடன் போக்குவரத்து சீராக இருப்பதை காண முடிவதாகவும் அவர் சொன்னார். போக்குவரத்து நெரிசல் இன்று மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாகனமோட்டிகள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.