Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கு மருத்துவமனைகளில் நாள்தோறும் 1,000 த்திற்கு மேற்பட்டோர் அனுமதி

கோலாலம்பூர், ஆக 5 – நாள்தோறும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிடுகையில் சிலாங்கூர், கோலாலம்பூர், மற்றும் புத்ரா ஜெயாவில் கோவிட் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்கும் பொருட்டு கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு வெளியே கள மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். அதே போன்று செலயாங் மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதிலும் கடந்த இரண்டு வாரங்களில் 2,884 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன. சுங்கைப் பூலோ மருத்துமனை,செலயாங் மருத்துவமனை,அம்பாங் மருத்துவமனை, செர்டாங் மருத்துவனை, யூ,கே.எம் குழந்தைகள் நிபுணத்துவ மருத்துவமனைகள் முழு கோவிட் மருத்துவமனைகளாக செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!