
கிள்ளான், பிப் 3 – கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போதைக்கு அங்கு ஆபத்தற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இது தொடர்பான அறிவிப்பு அவசர சிகிச்சை பிரிவின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. நோயாளிகள் அருகேயுள்ள இதர சுகாதார வசதிகளுக்கு செல்லும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் வழக்கத்தைவிட அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது