
ஷா அலாம், டிச 3 – இரவு 8 மணிவரை நேற்று பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து கிள்ளான் மற்றும் ஷா அலாமில் 25 பகுதிகள் நீர் பெருக்கு ஏற்பட்டது. அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு படையினர் அணுக்கமாக கண்காணித்து வருவதாக சிலாஙகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சிலாங்கூர் இயக்குனர் Norazam Khamis தெரிவித்திருக்கிறார். கால்வாய்களில் குப்பைகளில் அடைத்துக்கொண்டு நீரோட்டம் தடைப்பட்டதால் சாலைகளில் நீர் பெருக்கம் ஏற்பட்டது. கிள்ளானில் Taman Maznah, Taman Melawis, Kampung Jawa. Sungai Udang., Taman Chi Liung, Johan Setia, Bandar klang,Taman Sentosa, Batu Belah, Kampung Jaln kebun. Taman Bijaya உட்பட பல்வேறு இடங்களில் நீர் பெருக்கு ஏற்பட்டது. எனினும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லையென Norazam Khamis கூறினார்.