கோலாலம்பூர், பிப் 25 – ஷா அலாமில் நீர் மின் Pump முறையில் ஏற்பட்ட தவறினால் கிள்ளான், ஷா அலாம் மற்றும் சுபாங் ஜெயாவில் 42 பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
Bukit Jelutong கில் உள்ள தனது Pump மில் மின்சார முறையில் ஏற்பட்ட தவறினால் இன்று காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டதாக Air Selangor நிறுவனம் தெரிவித்தது.
Putera Heights, Bukit Kemuning, மற்றும் USJ Heights ஆகிய இடங்களிலும் நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.