கோலாலம்பூர், பிப் 27 – போர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரேன் , கீவ்விலிருந்து 9 மலேசியர்களும் அவர்களுடன் இரு உறவுகளும், ஒரு சிங்கப்பூர் நாட்டவரும் வெளியேறி, போலந்து சென்றடைந்திருப்பதாக, வெளியுறவு அமைச்சர் சய்ஃபூடின் அப்துல்லா தெரிவித்தார்.
அவர்கள் விரைவில் கோலாலம்பூர் வந்தடைவார்கள் என அவர் கூறினார்.
அக்குழுவினர், சாலை வழியாக 782 கிலோமீட்டர் தூரம் பயணத்தைக் கடந்து போலந்தை வந்தடைந்துள்ளனர்.
பொது விமானங்கள் தாக்கப்படுவதைத் தவிர்க்க, உக்ரேன் வான் பகுதி பொது வான் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.