கீவ், மார்ச் 1 – கிட்டதட்ட 40 மைல் தூரம் கொண்ட ரஷ்யாவின் கவச வாகனங்கள் உக்ரேன் தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருவதை துணைக்கோள படங்கள் காண்பித்துள்ளன.
இதனிடையே, உக்ரேன் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக கீவ், மொஸ்கோ இரு தரப்பின் பிரதிநிதிகள் பெலாருசில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்திப்பு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண அவ்விரு தரப்புகளும் இணங்கியிருப்பதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.