சென்னை, செப்டம்பர் -15 – விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அதன் தொகுப்பாளரான மணிமேகலை.
எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.
மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை என அவர் கூறியுள்ளார்.
தமது திடீர் விலகலுக்கு, இந்த சீசனில் சமையல்காரராக நுழைந்த மூத்த பெண் தொகுப்பாளரின் அதிகப்பிரசங்கித் தனமே காரணம் என மணிமேகலை குற்றம் சாட்டியிருப்பது
இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து, அடிக்கடி என் வேலையில் அவர் குறுக்கீடு செய்து வந்தார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தம்மை overtake செய்வதில் தான் அவரின் கவனம் இருந்தது.
15 ஆண்டு காலம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வரும் தாம், இப்படியொரு மோசமான அனுபவத்தைச் சந்தித்ததில்லை என்றும் அவர் சொன்னார்.
எனவே, இனியும் பொறுக்க முடியாது என்பதால், சுயமரியாதைக் கருதி விலகுகிறேன் என மணிமேகலை நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
யார் அந்த மூத்த பெண் தொகுப்பாளர் என்பதை மணிமேகலை குறிப்பிடா விட்டாலும், அது பிரியங்கா தான் என்பதை நெட்டிசன்கள் யூகித்து விட்டனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது முதல் அதன் வெற்றிக்குக் காரணமாக இருப்பவர்களில் மணிமேகலையும் ஒருவர்.
தனது டைமிங் நகைச்சுவையால் வாரக் கடைசியில் நிகழ்ச்சியைப் பார்ப்போரை மிகவும் இரசிக்க வைப்பவர்.
முந்தைய சீசன்களில் கோமாளியாகப் பட்டையைக் கிளப்பியவர், இந்த 5-வது சீசனில் ரக்ஷனுடன் இணைந்து தொகுப்பாளராக வலம் வந்தார்.