
லண்டன், மார்ச் 10 – பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கும் நிகழ்வில் புகைப்படம் எடுத்துக்கொள்வது வாழ்க்கை முழுமைக்கும் மனதில் மகிழ்ச்சியூட்டும் இனிமையான நினைவாக இருக்கும். இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட சீன மாணவி சென் யிங் பட்டம் வாங்கச் சென்றபோது திடீரென குங்பூ ஸ்டைலில் குட்டிக்கரணம் அடித்தார். பட்டம் வழங்கவிருந்த கல்வியாளர்களும் இக்காட்சியை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி கை தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த மாணவிக்கு கல்வியாளர் சிரித்தபடி பட்டம் வழங்கினார். சமூக வலைத் தளங்களில் பதிவான அந்த காட்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.