Latestமலேசியா

குஜ்ராத்தில் பிராத்தனைக் கூட்டத்தின் போது இறந்தவர் உயிரோடு திரும்பினார்; அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

குஜராத், நவம்பர்-18 – இந்தியா, குஜராத்தில் இறந்துப் போனவருக்கு நடத்தப்பட்ட பிராத்தனைக் கூட்டத்தில், அந்நபரே உயிரோடு திரும்பி வந்ததால் உறவினர்கள் தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஜேஷ் சுதார் (Birejesh Suthar) எனும் 43 வயது வர்த்தகர் அக்டோபர் 27-ஆம் தேதி காணாமல் போனார்.

2 வாரங்கள் கழித்து பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அதன் உடலமைப்பு சுதாரை ஒத்திருந்ததால் அது அவர் தான் என நினைத்து குடும்பத்தார் உடலைப் பெற்றுச் சென்று விட்டனர்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி சுற்றிக் கொண்டிருந்தவர் என்பதால், இறந்தது சுதார் தான் என நம்பி அவரை தகனம் செய்தும் விட்டனர்.

மறுநாள் சுதாருக்கு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென அவர் உள்ளே நுழைந்ததால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

சுதார் உயிரோடு வந்தது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி என்றாலும், போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சுதார் குடும்பத்தார் தகனம் செய்த உடல் யாருடையது என்ற விசாரணையைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!