
கோலாலம்பூர், மார்ச் 23 – குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கய்ரூல் சய்மி டாவுட் ( Khairul Dzaimee Daud ) , பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டார்.
பிரதமர் துறையில் அவர், சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வேளையில், குடிநுழைவுத் துறையின் புதிய தலைமை இயக்குநராக, தேசிய பதிவு துறையின் தலைமை இயக்குநர் Ruslin Jusoh பொறுப்பை ஏற்றுள்ளார்.