
மலாக்கா, அக் 3 – மலாக்கா சென்டரல் பஸ் முனையத்தில் அங்காடிக் கடைகளை நடத்திவந்த வெளிநாடடு குடியேறிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி இதற்கு முன் மலாக்கா ஆட்சிக்குழு கோரிக்கை விடுத்திருந்தது. மலாக்கா சென்டரில் பஸ் முனையத்தில் சாலையோரம் அங்காடிக் கடைகளை நடத்திவரும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளால் உள்ளூர் மக்கள் அதிருப்தியடைந்திருப்பதாக மலாக்கா மகளிர், குடும்ப மேம்பாடு மற்றும் சமூக நல குழுவுக்கு தலைமையேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Kalsom Noordin தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறை மேகொண்ட நடவடிக்கையில் ஆவணங்கள் இல்லாத 23 பேர் கைது செய்யப்பட்டனர். மலாக்கா பஸ் முனையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதுமம் அதிக அளவில் வெளிநாட்டு குடியேறிகளின் நடமாட்டமாக இருபபதால் அப்பகுதியை லிட்டல் டாக்கா வட்டாரம் என உள்நாட்டினர் வருணிக்கின்றனர். இந்த நடவடிக்கையின்போது சிலர் தப்பியேட முயன்றபோதிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா குடிநுழைவுத்துறையின் இயக்குனர் Anirwan Fauzee Mohd Aini தெரிவித்தார்.