Latestமலேசியா

குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 சிறார்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் – சைபுடின் தகவல்

கோலாலம்பூர், ஆக 22 – குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் 80 பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவர். விரைவில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் (Saifudin Nasution Ismail )தெரிவித்திருக்கிறார். அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் பராமரிப்பு மையத்தை ஏற்படுத்தும் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருவதாகவும் குடிநீர், மின்சார விநியோகம் மற்றும் படுக்கை அறைகளை தயார்படுத்துவது உட்பட சில அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

செமினி, புக்கிட் ஜாலில் மற்றும் கே.எல்.ஐ.ஏ ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களோடு புதிய பரமரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் என சைபுடின் கூறினார். இன்று புத்ரா ஜெயாவில் உள்துறை அமைச்சின் மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். இதனிடையே அதிக அளவிலான கடப்பிதழை அச்சடிக்கும் இயந்திரத்தை குடிநுழைவுத்துறை கொண்டிருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். குடிநுழைவுத்துறையின் கடப்பிதழ் அலுவலகங்களில் கடப்பிதழ் பெறுவதற்காக காத்திருக்கும் கூட்ட நெரிசலை இதன் வழி குறைக்க முடியும். தற்போது தினசரி 400 கடப்பிதழ்களை மட்டுமே அச்சடிக்கும் இயந்திரத்தை நாட்டிலுள்ள குடிநுழைவுத்துறை அலுவலகங்கள் கொண்டுள்ளன. தினசரி 1,000 கடப்பிதழ்களை அச்சடிக்கும் வகையில் நவீன இயந்திரத்தை கொண்டிருக்கும்படி Saifuddin வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!