Latestமலேசியா

குடியிருப்புப் பகுதியில் உணவு தேடி திரியும் யானைகள்

பஹாங்கில், உணவு தேடி யானைகள் வீடமைப்பு பகுதிகளில் நுழைவது வழக்கமாகியுள்ளது. குறிப்பாக, தெமர்லோவிலுள்ள, கெமாசுல் தோட்ட, வன அலுவலக வீடமைப்பு பகுதியில், அழையா விருந்தாளியாக உணவு தேடி நேற்று 15 யானைகள் கூட்டமாக புகுந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாலை மணி 6.50 வாக்கில் அந்த யானைக் கூட்டம் வீடமைப்பு பகுதியில் புகுந்தது. இதற்கு முன், இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி குடியிருப்புப் பகுதியில் நடமாடி வந்த யானைகள், பகலில் அங்கு வருவது இதுவே முதல் முறையென அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு, உணவு தேடி குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த யானைகள், பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் கெமாசுல் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் நுழைந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அதே நாளன்று இரவு மணி பத்து வாக்கில், மீண்டும் அந்த யானைக் கூட்டம் குடியிருப்புப் பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!