கீவ், மார்ச் 3 – உக்ரைய்னில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ராணுவ நிலைகளில் ரஷ்ய படையினர் தொடர்ந்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலினால் இதுவரை 2,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். போர் தொடுக்கப்பட்டு ஒரு வாரங்களாகிவிட்ட போதிலும் உக்ரைய்ன் அரசாங்கத்தை கவிழ்க்கும் ரஷ்யாவின் முயற்சி வெற்றி பெறவில்லை.
உக்ரைய்ன் தலைநகர் Kyiv வில் ஏவுகணை, பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு தாக்குதலையும் ரஷ்ய படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்போது ரஷ்ய படைகளின் முழு கவனமும் உக்ரைய்னின் இரண்டாவது நகரான Kharkiv பக்கம் திரும்பியுள்ளது. அங்கு நேற்று மட்டும் பொதுமக்களில் 227 பேர் மாண்டதோடு 525 பேர் காயம் அடைந்ததாக ஐ.நா மனித உரிமைக்குகுழு அறிவித்தது.