Latestஇந்தியா

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது 8 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்

மும்பை, ஜூன் 10 – மும்பையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் எட்டு குழந்தைகள் உட்பட 11 பேர் மாண்டனர். நள்ளிரவுவாக்கில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

இடிபாடுகளுக்கிடையே மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த சம்பவத்தில் காயம் அடைந்த எண்மர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்காக இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் நகரம் என வருணிக்கப்படும் மும்பையில் மழைக் காலத்தின்போது குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து விழுவது வழக்கமான ஒன்றாகும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!