Latestமலேசியா

குடியேறிகளுக்கு எதிரான கைது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வீர் – முகமட் ஹசான்

கோலாலம்பூர், ஜூன் 11- கோவிட் தொற்றுக்கு எதிராக நாடு போராடிவரும் இவ்வேளையில் குடியேறிகளுக்கு எதிராக மாபெரும் கைது நடவடிக்கை மேற்கொள்வதை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும் என அம்னோவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கேட்டுக்கொண்டார்.

சட்ட அமலாக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவினாலும் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இரக்கமும் மனிதாபிமானமும் தேவையென அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் ஒவ்வொரு குடியேறிகளும் சட்டத்திற்குட்பட்டவர்கள் என்பதோடு சட்டப்பூர்வ ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே வேளையில் அவர்கள் சட்டப்பூர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மரியாதை கொடுத்து நடத்த வேண்டியது அவசியமாகும்.

அனைத்துலக சட்டங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக நாட்டின் குடிநுழைவுத்துறையின் கொள்கை இருக்கக்கூடாது என நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரிபுசாருமான முகமட் ஹசான் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!