
கோலாலம்பூர், செப் 13 – நாட்டிலேயே அதிகமாக குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. அதற்கு அடுத்த நிலையில் கெடா, சரவாக் மற்றும் கிளந்தான் திகழ்வதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்களிடையே இருந்துவரும் போதைப் பொருள் பழக்கத்தினால் குடும்ப வன்செயலில் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் 2020ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை 22,003 குடும்ப வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புக்கிட் அமான் மகளிர் மற்றும் சிறார் பாலியல் விசாரணைப் பிரிவின் துணை தலைமை இயக்குனர் துணை கமிஷனர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்திருக்கிறார். நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் பெரிய அளவில் ஏற்பட்ட குடும்ப வன்செயல் சம்பவங்களில் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.