
ஈப்போ, மார்ச் 11 – அரசாங்க நிறுவனங்களில் அமலில் இருக்கும் ஆடை கட்டுப்பாட்டு விதியினால் , அண்மையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ஈப்போவிலுள்ள SSM –மலேசிய நிறுவன ஆணையத்திற்கு சென்றிருந்தபோது, சற்று முட்டிக்கு மேல் வரை இருக்கும் ஆடையை அணிந்திருந்ததற்காக, Khor Hooi Chin எனப்படும் அந்த பெண் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டார்.
தமது ஆடை ,வேலையிடத்தில் அணியக் கூடிய பொருத்தமான ஓர் உடை என கூறியும், அவருக்கு அனுமது வழங்கப்படாததை அடுத்து, அருகிலுள்ள பேரங்காடியில் நீளமான ஓர் ஆடையை வங்கி அணிந்து கொண்டு, பின்னர் அந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த பெண் கூறினார்.
இதனால், தமது நேரமும் பணமும் தான் விரையமானதாக அப்பெண் குறிப்பிட்டார்.