
தீபகற்ப மலேசியாவில், கடந்த ஏப்ரல் மாதம் வரையில், குண்டும் குழியுமாக இருந்த ஈராயிரத்து 138 கூட்டரசு சாலைகள் சீரமைக்கப்பட்டதாக, பொதுப் பணி அமைச்சு தெரிவித்தது.
அதே சமயம், 2022-ஆம் ஆண்டு நெடுகிலும், எட்டாயிரத்து 519 கூட்டரசு சாலைகளில் காணப்பட்ட குழிகள் மூடப்பட்டு, சீரமைக்கப்பட்டதையும், பொதுப் பணி துணையனைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் மக்களவையில் இன்று சுட்டிக் காட்டினார்.
2021-ஆம் ஆண்டு, ASaPP – சாலை குழிகளை கண்காணிப்பும் புகார் முறையை, JKR – பொதுப் பணி துறை அறிமுகப்படுத்தியது.
அதன் வாயிலாக, சாலைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் புகார்கள் உடனடியாக அந்த முறையின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் தீர்வுக் காணப்பட்டு வருவதாக துணையமைச்சர் சொன்னார்.
‘சுழியம் சாலை பள்ளம்’ திட்டம் எந்த அளவிற்கு உடனடியாக செயல்படுத்தப்படுகிறது என வினவப்பட்டதற்கு, துணையமைச்சர் இவ்வாறு விளக்கமளித்தார்.