
கோலாலம்பூர், ஜன 15 – அம்பாங் , Pandan Indah வில் குண்டு வெடிப்பு தாக்குதலில் சமையல்காரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட திருமணமான தம்பதியர் மீது நாளை ஜன 16 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 வயதுடைய ஆடவரும் அவரது 30 வயது மனைவியும் அம்பாங் நீதிமன்ற வளாகத்திற்கு நாளை கொண்டு வரப்படுவார்கள் என அம்பாங் OCPD துணை கமிஷனர் Mohamad Farouk Eshak தெரிவித்தார்.
Pandan Indah வில் சமையல்காரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் எங்களது விசாரணையை நங்கள் முடித்துவிட்டோம். குற்றவியல் சட்டத்தில் 302 ஆவது விதியின் கீழ் அந்த தம்பதியர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என Mohamad Farouk தெரிவித்தார். ஜனவரி 3 ஆம் தேதியன்று கெடா , Serdang கிலுள்ள வீடு ஒன்றில் அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த குற்றப் புலனாய்வுத்துறை குழுவினர் அந்த சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர்.