
லண்டன், செப்டம்பர் 5 – பிரிட்டனில், போனி ரக குதிரை ஒன்று, பேருந்தில் ஏற முயன்ற காணொளி வைரலாகியுள்ளது.
உரிமையாளரிடமிருந்து தப்பி ஓடும் வகையில் காணப்பட்ட அந்த குதிரைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிசயித்து போனதாக கூறப்படுகிறது.
அந்த குதிரை பேருந்தில் ஏற, மஞ்சள் அங்கியை அணிந்திருந்த இரு ஆடவர்கள் உதவும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகில், வாகனத்தை நிறுத்திய நபர் ஒருவர், அந்த நகைச்சுவையான காணொளியை பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.
எனினும், அந்த குதிரை பேருந்தில் பயணிக்கவில்லை. அதிலிருந்த பயணிகளை “பார்த்துவிட்டு” மீண்டும் சாலையில் இறங்கி அது நடக்க தொடங்கியதாக, பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டனில், விலங்குகள் பொது போக்குவரத்தில் ஏறும் சம்பவங்கள் வழக்கமாகி வருகிறது.