
நியூயார்க், நவம்பர் 17 – அமெரிக்கா, நியூயார்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் சரக்குப் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த குதிரை ஒன்று, திடீரென வெறித்தனமாக நடந்து கொண்டதால், அவ்விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவ்விமானம், நியூயார்க்கிலிருந்து பெல்ஜியம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
குதிரை கூண்டிலிருந்து தப்பி வெறித்தனமாக நடந்து கொள்வது குறித்து, விமான பணியாளரிடமிருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அனுப்பப்பட்டதை அடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
விமானம் வானில் சுமார் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்த வேளை ; உடனடியாக போஸ்டன் கடற்கரைக்கு வெளியே U வளைவு போட்டு விமானம் தரையிறங்கியது.
பாதுகாப்பாக தரையிறங்க ஏதுவாக, விமானத்தில் நிரப்பப்பட்டிருந்த சுமார் 20 டன் எரிப்பொருள் அட்லாண்டிக் கடலில் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானம் தரையிறங்கியவுடன், சம்பந்தப்பட்ட குதிரை கால்நடை மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டது.