
கோலாலம்பூர், மே 27 – குத்தகைகளை பெறுவதற்காக Beaufort ட்டிலுள்ள குத்தகையாளர் ஒருவர் அதிகாரிகளுக்கு ஒரு ஆண்டிற்கு 1 மில்லியின் ரிங்கிட்வரை லஞ்சம் வழங்குவார் என சபா மாநில நீர்த்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதி அன்பளிப்பு என்ற முறையில் குத்தகையாளரின் அந்த லஞ்சப் பணம் இருக்கும் என Beaufort ட்டில் பொறியியலாராகவும் பணியாற்றியுள்ள Suhaimi Asbullah என்ற அந்த அதிகாரி கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டிற்கு 40 முதல் 50 குத்தகைகளை பெறுவதற்கு எட்டு லட்சம் ரிங்கிட் முதல் ஒரு மில்லியன் ரிங்கிட்வரை குத்தகையாளர் லஞ்சம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதனால் பகிரங்க டென்டர் முறையின்றி சம்பந்தப்பட்ட குத்தகையாளர் நேரடியாக குத்தகைகளை பெற்றதாக சபா நீர்த்துறையின் முன்னாய் இயக்குனர் AG Mohd Tahir மற்றும் மேலும் இருவர் மீதான லஞ்ச குற்றச்சாடடு வழக்கு விசாரணையில் நீதிபதி Abu Bakar Manat முன்னிலையில் சாட்சியம் அளித்தபோது Suhaimi தெரிவித்தார்.