Latest

குபாங் கெரியனில் புலனம் வாயிலாக பாலியல் சேவை; குடும்ப மாதுவுக்கு RM2,000 அபராதம்

கோத்தா பாரு, டிச 30 – குபாங் கெரியனில் (Kubang Kerian) உள்ள Padang Seri Paduka வில் விருந்தினர் மாளிகையில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் சேவைகளை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு குடும்ப மாதுவுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

36 வயதான அனிஷா ஷக்கிரா அகமட்டிற்கு (Aniza Shakiera Ahmad ) எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் அகமட் ஷாபிக் அய்ஷாட் நஸ்ரி ( Ahmad Syafiq Aizat Nazri) முன்னிலையில் வாசிக்கப்பட்ட பின் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நவம்பர் 16 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் படாங் செரி படுகா (Padang Seri Paduka ) விருந்தினர் மாளிகையில் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

Op Noda சோதனை நடவடிக்கையின்போது அனிஷா கைது செய்யப்பட்டதோடு வாடிக்கையாளரின் சேவைக்கு ஒவ்வொரு முறையும் 150 ரிங்கிட் பெறுவதையும் போலீசார் கண்டறிந்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 372B விதியின் கீழ் Aniza மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தனக்கு ஏழு பிள்ளைகள் இருப்பதால் அபராதத் தொகையை குறைக்கும்படி நீதிமன்றத்தில் கருணை மனு கோரியதைத் தொடரைந்து Anizaவுக்கு 2,000 ரிட்கிட் அபராதம் விதிப்பதாகவும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!