தைப்பிங், பிப் 5- தைப்பிங்கில் Kurnia Jaya Kamunting குடியிருப்புப் பகுதிக்குச் நோக்கிச் செல்லும் சாலைக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் ஆடவர் ஒருவர் வசித்துவரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று Taiping Silver State எனும் முகநூல் பக்கத்தில் Miezan Avengers எனும் பெயர்க்கொண்ட பயனர் ஒருவர் அந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்ததோடு, சம்பந்தப்பட்ட ஆடவர் ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் அவருக்கு தற்சமயத்துக்கு அங்குள்ள பொதுமக்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர். பாகான் செராயைச் சேர்ந்த அந்த இந்திய ஆடவருக்கு தைப்பிங் சமூக நலத்துறையினர் விரைவில் உதவ வேண்டும் எனவும் அந்தப் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.