Latestமலேசியா

குப்பைத் தொட்டியில் பெண் சிசுவின் உடல் கண்டெடுப்பு

பட்டர்வொர்த், அக் 23- B4 Taman Bagan அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.35 மணியளவில் அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவரும் துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்த இரு மியன்மார் ஆடவர்களும் குப்பைகளுக்கு மத்தியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த அந்த சிசுவின் உடலைக் கண்டெடுத்ததாக செபெராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Noorzainy Mohd. Noor கூறினார்.
அந்தச் சிசுவின் உடலை வீசியவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியோடு விசாரணை முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!