
கோலாலம்பூர், பிப் 7 – குப்பையில் வீசப்பட்ட அட்டைப் பெட்டியில் புதிதாக பிறந்த பெண் சிசுவின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஸ்ரீ கெம்பாங்கான் Lestari Kebajikan 1 என்ற முகவரியிலுள்ள சமூக நல இல்லத்திற்கு முன் குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்த அட்டைப் பெட்டியில் அந்த சிசுவின் சடலம் காணப்பட்டது. துணியால் சுற்றப்பட்டிருந்த அந்த சிசுவின் சடலத்தை கும்பைகளை சேகரிக்கும் ஊழியர் ஒருவர் கண்டதாக செர்டாங் போலீஸ் தலைவர் AA Anbalagan தெரிவித்தார்.