Latestஉலகம்

‘குப்பை அழகி’ தாய்லாந்தின் உலக அழகியாக மாறினார்

லெட்டர்ஸ், ஆக 6 – தனது பெற்றோர்கள் துப்புறவு பணியாளர்கள் என்பதால் ‘குப்பை அழகி’ என அழைக்கப்பட்ட 23 வயது Anna Sueangam-iam தற்போது 2022ன் தாய்லாந்து உலக அழகியாக வாகை சூடியுள்ளார்.

தனது வறுமையின் பின்னணியால் குப்பை அழகி என்றே Anna சிறுவயது முதல் ஏளனம் செய்யப்பட்டுள்ளார். குப்பை தொட்டியிலிருந்து பெற்றோர்கள் கண்டெடுக்கும் பொம்மைகளே அவரது விளையாட்டுப் பொருளாகும். இப்படி ஏழ்மையான சூழலில் படித்து, பேங்கோக்கின் காசேட்சார்ட் பல்கலைக்கழகத்தில், ஹோட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை துறையில் பட்டபடிப்பை முடித்துள்ளார் அவர். அதன் பின்னர், 2018ஆம் ஆண்டு மோடலிங் மற்றும் அழகி போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர் தற்போது தாய்லாந்தின் பிரபலமான மோடல் அழகி, நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த ஜூலை 30ஆம் திகதி நடந்து முடிந்த இப்போட்டியின் இறுதிச் சுற்றில் Anna 2022-ன் தாய்லாந்து உலக அழகியாக வாகை சூடினார். அதில் மக்கள் வாக்குகள் அதிகம் கிடைத்ததோடு, தனது பதிலாலும் நடுவர்களை கவர்ந்து இந்த அங்கீகாரத்தை தன் வசப்படுத்தியுள்ளார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!