Latestமலேசியா

காலுறை விவகாரம்: தகராறை நிறுத்துவீர் பிரதமர் அன்வார் அறைகூவல்

ஈப்போ, மார்ச் 26 – காலுறை விவகாரத்திற்காக பல வாரங்களாக தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய தகராறுகள் தொடர்ந்தால் அடுத்தக்கட்ட வேலைகளை நாம் பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். கருத்து வேறுபாடுகளை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து கொண்டிருப்பதை விடுத்து மிகப் பெரிய விவகாரங்களில் மலாய்க்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என Anwar வலியுறுத்தினார். உலகிற்கு சவாலாக இருக்கக்கூடிய இலக்கவியல், எரிபொருள் போன்ற அம்சங்களில் மலாய்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறைகூல் விடுத்தார்.

கடந்த இரண்டு வார காலமாக நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள காலுறை விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் அரசாங்க அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை கைது செய்து அவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என தாம் ஏற்கனவே கூறிவிட்டதால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்க வேண்டும். அனைவரும் தங்களை ஹீரோக்களாக காட்டிக்கொள்வதற்கு பல வாரங்களாக இந்த விவகாரத்திலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் நம்மால் இதர பணிகளை மேற்கொள்ள முடியாது என நேற்றிரவு ஈப்போவில் பேரா மாநில ரீதியிலான Madani நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அன்வார் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!