Latest
குப்பை மேடாக சாஆ- உடனடி துப்புரவு தேவை – டத்தோ முருகையா

சாஆ, மார்ச் 9 – வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஜொகூர் சாஆ வட்டாரம் தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சேதமடைந்த பொருட்கள் யாவும் சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றத்தாலும் மக்கள் அவதியுறுவதாக அங்கு நிலவரத்தை நேரில் சென்று பார்வையிட்ட ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ முருகையா கூறியுள்ளார்.
வெள்ளத்தால் மக்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து அவதிப்படும் நிலையில், கூடுதலாக இந்த குப்பைகளின் துர்நாற்றமும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்படாத மாநிலங்களின் நகராண்மைக் கழகங்கள் தங்களின் துப்புரவு லாரிகளை அனுப்பி இந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உதவ வேண்டும் என டத்தோ முருகையா கேட்டு கொண்டுள்ளார்.