புத்ராஜெயா, ஜனவரி-12, புத்தாண்டில் மலேசியா 1 புதிய mpox நோய் சம்பவத்தைப் பதிவுச் செய்துள்ளது.
கடந்த 21 நாட்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய 24 வயது இளைஞருக்கே mpox தொற்றியுள்ளது.
ஜனவரி 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவ்வாடவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
இதையடுத்து, 2023 ஜூலையிலிருந்து குரங்கம்மை தொடர்பில் நாட்டில் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 2023-ல் 9 சம்பவங்களும், கடந்தாண்டு 2 சம்பவங்களும் பதிவாகியதாக, KKM எனப்படும் சுகாதார அமைச்சு கூறியது.
அனைத்துச் சம்பவங்களும் Clade II பிறழ்வாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்த குரங்கம்மைப் பரவலை KKM அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
பொதுமக்களும் அது குறித்த ஆகக்கடைசி தகவல்களை KKM-மின் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.