ஜெனிவா, ஆகஸ்ட்-15 – ஆப்பிரிக்க கண்டத்தில் பரவியுள்ள MPox எனப்படும் குரங்கம்மை நோய் உலகலாய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நோயை உலக சுகாதார நிறுவனம் (WHO) சுகாதார அவசரநிலையாக அறிவிப்பது ஈராண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.
முன்பு Monkey Pox என அழைக்கப்பட்ட இந்நோய், முதலில் ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of Congo) பரவி இதுவரை 450 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.
தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அது வேகமாகப் பரவி வருவது அறிவியலாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இவ்வாண்டு இதுவரை மட்டுமே 17,000-க்கும் மற்பட்ட குரங்கம்மைப் பாதிப்புகள் பதிவாகி, 517 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலகலளவில் 13 நாடுகளில் இந்த MPOX தொற்று பதிவாகியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தைத் தாண்டி அது மேலும் பரவாதிருக்க, உலக நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு அவசியமென WHO சுட்டிக் காட்டியது.
உடலுறவு, தோலிலிருந்து தோல் தொடர்பு, மற்றவர்களுடன் நெருக்கத்தில் பேசுவது அல்லது சுவாசிப்பது போன்ற நெருங்கிய தொடர்புகளின் மூலம் இந்த Mpox பரவுகிறது.
வழக்கமாக அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது; ஆனால் அரிதாக நடக்கும் சம்பவங்களில் ஆபத்து ஏற்படலாம்.
குரங்கம்மை ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல் காணும்; அதோடு உடலில் சீழ் பிடித்த புண்களும் உருவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.