ஸ்டாக்ஹோம், ஆகஸ்ட்-17, உயிர் கொல்லி தொற்று நோயான குரங்கம்மை (mpox) பாதிப்பை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டுமென, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
குறிப்பாக மருந்தக நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பை விரைப்படுத்த வேண்டுமென WHO கேட்டுக் கொண்டது.
WHO-வின் அறிக்கையைத் தொடர்ந்து முழு விழிப்பு நிலையிலிருப்பதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நோய் பரவும் அபாயமுள்ள பகுதிகளுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாமென்ற பயண ஆலோசனை வழங்கவும் அந்நாடு தயாராகியுள்ளது.
மேலும் ஆபத்தான குரங்கம்மை வகையின் பரவல் ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன் முதலாக சுவீடன் நாட்டிலும் பாகிஸ்தானிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதால் பீதி அதிகரித்துள்ளது.
இதையடுத்து வெளிநாட்டினருக்கு mpox சோதனையை கட்டாயமாக சீனாவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
குரங்கம்மை நோயை உலகலாய சுகாதார அவசரநிலையாக WHO புதன்கிழமையன்று அறிவித்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இந்த mpox நோயால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.