Latestஉலகம்

குரங்கம்மை நோய் ‘புதிய கோவிட்’ அல்ல ; உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

ஜெனிவா, ஆகஸ்ட் -21, குரங்கம்மை (mpox) நோய் உலகலாய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது ஒரு ‘புதிய கோவிட்’ அல்ல என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெளிவுப்படுத்தியுள்ளது.

mpox பெரும்பாலும் உடலுறவு உட்பட தோலோடு தோல் சேரும் போது பரவுகிறது.

அது யாருக்கும் பரவலாமென்றாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஆபத்தை அது கொண்டு வராது.

எனவே, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஈடாக அதனை நினைத்து பீதியடைய வேண்டாமென WHO கேட்டுக் கொண்டது.

உயர் மட்ட எச்சரிக்கை விடப்பட்டதற்கான காரணம், உலக நாடுகளை அச்சுறுத்துவதற்கு அல்ல.

மாறாக, mpox தங்கள் நாட்டுக்குள்ளும் பரவினால், அதனை எதிர்கொள்ள அவை தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த தான் என WHO அறிக்கையில் கூறியது.

இந்த mpox நோய் பரவலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து நாங்கள் அறிவோம்; குறிப்பாக ஐரோப்பாவுக்கு மேலும் பரவாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு பதிவான mpox நோய் சம்பவங்களில் 95 விழுக்காட்டுச் சம்பவங்கள் ஆப்பிரிக்க நாடான கோங்கோவில் (Congo) பதிவாகியுள்ளன.

அங்கு 500-கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!