
ஜெனிவா, நவ 2 – 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் 70,000த்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துலக அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய நிலையில் குரங்கு அம்மை நோய் குறைந்போதிலும் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் தொடர்ந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அந்நோய்க்கு எதிரான நடவடிக்கை எடுப்பதை தீவிரப்படுத்தவும், மக்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்துலக அவச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டேட்ரோஸ் அதானோம் ( Tedros Adhanom ) தெரிவித்தார்.