
கோலாலம்பூர், செப் 13 – மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து நண்பரை சுட்ட 69 வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த ஆடவர் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கெமாமன் போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார். திரங்கானு, கெர்தேவில் நடந்த அந்த சம்பவத்தில் 54 வயது ஆடவர் கையில் துப்பாக்கி தோட்டா காயத்திற்கு உள்ளானாதைத் தொடர்ந்து அவர் கெமமான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். மங்குஸ்தீன் மரத்தில் கிளைகள் அசைவதைக் கொண்டு குரங்குகள் தான் மங்கீஸ்தின் பழத்தைத் தின்பதற்கு ஏறியிருப்பதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக அந்த முதியவர் ஒப்புக்கொண்டார். 1990ஆம் ஆண்டின் சுடும் ஆயுத சட்டத்தின் 37 ஆவது விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.