இஸ்லாமாபாத், பிப் 14 – பாகிஸ்தானில், புனித குரான் நூலின் சில பக்கங்களை எரித்ததற்காக ஆடவர் ஒருவரை, கிராமத்து மக்கள் சேர்ந்து அடித்தே கொலை செய்திருக்கின்றனர்.
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த அந்த ஆடவரை கிராமத்து மக்கள் இழுத்து சென்று, தடி,கோடாரி,இரும்பு கம்பி ஆகியவற்றைக் கொண்டு அடித்து கொலை செய்த பின்னர், உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பில் போலீசார் 80 பேரைக் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் கொலையுண்ட ஆடவரை, தனது பாதுகாப்பில் வைத்திருந்த போலீஸ் எப்படி அவரை காக்கத் தவறியது என்பது தொடர்பில், முழு விசாரணையை வழங்கும்படி , அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.