Latestமலேசியா

மோசடி செய்பவர்களுடன் இணைக்கப்பட்ட 160,000வங்கிக் கணக்குகள் புக்கிட் அமான் கண்டறிந்தது

கோலாலம்பூர், ஜன 9 – புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையான “SemakMule” தரவுத்தளமானது, 2023 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுடன் இணைக்கப்பட்ட 160,095 வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை அடையாளம் கண்டுள்ளது. ஜனவரி மற்றும் செப்டம்பர் 2023-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்புக்கான தேசிய மையத்தின் ஆய்வில், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் சம்பந்தப்பட்ட 79,559 ஆன்லைன் மோசடி வழக்குகளில் 54 விழுக்காடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2.5 பில்லியன் ரிங்கிட் நிதி இழப்பு ஏற்பட்டது” என்று ஆய்வறிக்கை கூறுகிறது. 

மோசடி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், அதிகரித்து வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தனியார் பல்கலைக்கழகத்தின் தலைமை கண்டுபிடிப்பு மற்றும் நிறுவன அதிகாரி பேராசிரியர் டாக்டர் வினேஷ் திருச்செல்வம் தெரிவித்திருக்கிறார்.  போலி பேரிடர் நிவாரண மின்-பணம், வங்கி ஃபிஷிங் (phishing) மின்னஞ்சல்கள், போலியான வைரஸ் தடுப்பு பாப்-அப் (pop-up) செயலிகள், காதல் மோசடிகள், போலி சில்லறை தளங்களில்  ஃபார்ம்ஜாக்கிங் (formjacking) போன்ற பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகள் வெளிவந்துள்ளதையும் டாக்டர் வினேஷ்  திருச்செல்வம் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!