Latestசினிமா

குறிப்பிடப்படாத தேதிக்கு அஜித்தின் வலிமை திரைப்படம் ஒத்திவைப்பு

புது டில்லி, ஜன 7 – இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நடிகர் அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த திரைப்படம் திட்டமிட்டபடி 13 -ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறிப்பிடப்படாத தேதி வரையில் அத்திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், எச். வினோத், போனி கபூருடன் மீண்டும் இணையும் அஜித் குமார், இன்னும் பெயரிடப்படாத தனது 61 -வது படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!