Latestமலேசியா

குறுக்கே ஓடிய குரங்கை மோதுவதைத் தவிர்த்த ஆடவர்; கார் விபத்துக்குள்ளாகி மனைவியும் தாயும் பலி

பாலிங், செப்டம்பர் -2, கெடா, பாலிங்கில் சாலையின் குறுக்கே திடீரென பாய்ந்த குரங்கை மோதுவதைத் தவிர்க்க முயன்ற ஆடவர், அதற்கு விலையாக மனைவி மற்றும் தாயைப் பறிகொடுத்த சோகம் அரங்கேறியுள்ளது.

Malau – Kuala Ketil சாலையில் சனிக்கிழமை மாலை அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

கூலிம், சுங்கை செடிமில் உல்லாசப் பயணத்தை முடித்து விட்டு குடும்பமாக சுங்கை பட்டாணி, பெடோங்கிற்கு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திடீரென குரங்கு குறுக்கே ஓடியதால், காரோட்டி இடது பக்கமாக காரைத் திருப்ப, அது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து புதரில் மோதி நின்றது.

அதில் 26 வயது மனைவி Siti Norhaslisa Kamarudin, 69 வயது தாய் Omi Kalsom Man இருவரும் பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த 27 வயது Mohd Fadzil, 3 வயது மகன் Lufh Mikhael இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

2 வயது மகள் Lufiya Mikayla மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அபாயகரமாகவும் கவனக்குறைவாகவும் வாகனமோட்டி மரணத்தை விளைவித்ததன் பேரில் அவ்வாடவரை பாலிங் போலீஸ் விசாரிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!