
அலோர் காஜா, மார்ச் 13 – மலாக்கா, அலோர் காஜா, Jalan Lubok China -வில் , இரு வயதான தம்பதியர் பயணித்த மோட்டார் சைக்கிள் , குரங்கின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
அந்த மூதாட்டி அலோர் காஜா மருத்துவமனையில் உயிரிழந்ததாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர் Arshad Abu தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அந்த மூதாட்டி தனது 76 வயது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது , திடிரேன பாதையின் குறுக்கே குரங்கு ஒன்று கடந்து சென்றது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. மோதப்பட்ட குரங்கு அங்கிருந்து ஓடிச் சென்ற வேளை, முதியவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.