Latestமலேசியா

குறுக்கே வந்த நாயால் வந்த விணை; உயிர் தப்பிய மூன்று நண்பர்கள்

மலாக்கா, Masjid Tanah – வில், குறுக்கே ஓடிய நாயை தவிர்க்க முயன்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததை அடுத்து, மூன்று நண்பர்கள் ஆபத்தான தருணத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

நேற்றிரவு மணி 8.30 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில் அம்மூவரும் பயணித்த Proton Iriz ரக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் வலது புறத்தில் இருந்த மூன்று மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து, மரத்தை மோதி நின்றதாக, Alor Gajah மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Arshad Abu தெரிவித்தார்.

எனினும், அதிர்ஸ்டவசமாக அவ்விபத்தில், 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூன்று நண்பர்களும், சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பியனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!